Thursday, June 25, 2009

இதயத்தை இதமாக்கும் அருமை உணவு! மீன் சாப்பிடுங்கள்!


நமது இரத்தத்தில் இரண்டு வகையான கொழுப்பு புரதங்கள் காணப்படுகின்றன.

1.உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (HDL Colestral)
2.தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (LDL Colestral)

இதில் தாழ் அடர்த்தி லிப்போ லிப்போ புரோட்டீன் (LDL Colestral) அதிகரிக்கும் போது அவை இரத்த நாளங்களில் படிந்து இதய நோய் வருவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.

ஆனால் உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (HDL Colestral)
தேவையற்ற கொழுப்பை இரத்தச் சுற்றோட்டத்திலிருந்து வெளியேற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு உகந்த உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (HDL Colestral) மீன்களில் செழுமையாகக் காணப்படுகிறது.

எனவே நமது அன்றாட உணவு வகைகளில் மீன்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லதாகும்.

மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் வைட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.

மேலும் மீன்களில் காணப்படும் ஒமேகா – 3 (OMEGA-3) எனப்படும் கொழுப்புப் பொருள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

சருமநோய் வராமல் தடுக்கிறது.

முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு (Cardiac Arrest) வராமல் காக்கிறது.

அப்ப எல்லோரும் நல்லா மீன் சாப்பிடுங்க!

பின் குறிப்பு:

மீனை எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும்.

இறைவழிகாட்டுதல்:

தரையில் உள்ளவற்றில் தானாகச் செத்தவை உண்பதை இஸ்லாம் விலக்கியுள்ளது. ஆனால் கடலில் உள்ளவை (மீன்) செத்து மிதந்தாலும் உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது!

பின் வரும் வசனத்தையும் சேர்த்து விளங்கிக் கொண்டால் மீன் எவ்வளவு மகத்தான ஓர் அருட்கொடை என்பது புலப்படும்!

“நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்” (திருக்குர்ஆன் 16:14)

நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ்

2 comments:

Adriean said...

மீன் அருமை உணவு என்ற உங்கள் கட்டுரையை மிகவும் ஆவலுடன் படித்தேன்.பின்பு மதத்தை பற்றி வந்தபோது போது வெறுத்து விட்டது மத பிரசாரமா செய்கிறீர்கள்? என்னங்க நீங்க?!

அபூமைந்தன் said...

வாங்க நண்பர் சந்திரன்! என் கட்டுரையை ஆவலுடன் படித்ததற்கு நன்றி! ஆமா மதப்பிரச்சாரம் செய்வது என்ன தவறான காரியமா? அல்லது தேசவிரோதச் செயலா? ஒவ்வொருவருக்கும் தாம் நம்பியிருக்கும் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய உரிமை உள்ளது. நான் சத்தியம் என்று அறிந்திருப்பதை பகிரங்கமாக எடுத்துச் சொல்ல எனக்கும் உரிமை உள்ளது. அதை ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். நான் சொன்னதை எல்லாம் கட்டாயமாக நம்பவேண்டும் என்று உங்களை நான் கட்டாயப் படுத்தவில்லையே? மீன் பற்றிய செய்திகள் உங்களுக்குப் பிடித்தது போல இறுதியில் உள்ள இறைவழிகாட்டுதல் பற்றிய செய்தி உங்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். பிடித்ததை எடுத்து விட்டு பிடிக்காததை விட்டு விடுங்களேன். அதை விடுத்து மதப்பிரச்சாரம் செய்வதைக் குற்றம் பிடிக்கிறீர்களே? என்னங்க நீங்க.